குமரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகம் சார்ந்த பிரதமர் மோடியை கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருப்பதாகவும் கிறிஸ்தவ நிறுவனங்களை குறிவைத்து எஃப் சி ஆர் ஏ மசோதா நிறைவேற்றப்படுவதாகவும் கூறினார்.
தாம் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை மோடி ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வி எழுப்பினார். இந்த மசோதாவால் சிறுபான்மையின மக்கள் கொதித்துப் போய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கண்துடைப்புக்காக கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்வதாகவும் இந்த மசோதாவால் பழங்குடியின மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலிலும் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது மன்மோகன் சிங்கை பலவீனமான பிரதமர் என்று நரேந்திர மோடி சாடியதாகவும் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு காவடி தூக்குவதாக விமர்சித்தார். மறைந்த தலைவர்களைப் பற்றி தவறாக பேசுவது அரசியல் மாண்பு கிடையாது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அனல் தெறிக்கும் பிரச்சாரம்... குமரியில் திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை..!!
எடப்பாடி பழனிச்சாமி அப்படி பேசுவது புதியது கிடையாது என்றும் ஏற்கனவே வாய்க்கொழுப்போடு பேசி இருப்பதாகவும் மக்கள் அவரை தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பாஜக கருதவில்லை என்றும் மோடி பிரதமர் ஆன பிறகும் கூட மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் மீனவ நலவாரிய உறுப்பினர் சேர்க்கை வயது வரம்பு 70 என்றும் மீனவர்களுக்கு 75 வயது வரையிலான ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தி திணிப்பை ஏற்கிறாரா EPS..? 3வது மொழி கட்டாயம்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!