கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு வீட்டு மனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
லாவண்யாவுக்கு சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி. குழந்தைகள் ரிஷிகா, அபினேஷ்க்கு அன்புக் கரங்கள் திட்டத்தின்கீழ் மாதம் ரூ.2,000 நிதி உதவி வழங்க உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள் என்றும் அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

சொன்னபடியே, லாவண்யாவிற்கு ரூ.2.50 லட்சம் வீட்டுமனைப் பட்டா, ரூ.3,55,660 மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் வழங்க ஆணை பிறப்பித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கி உள்ளதாகவும் கூறினார். ரிஷிகா மற்றும் அபினேஷிற்கு அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் தலா ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை... எல்லாம் ரெடி! NO PROBLEM... முதல்வர் ஸ்டாலின் பேட்டி...!
ரீணாவிற்கு திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6000 ஆகியவற்றை வழங்கினேன் என்றும் தெரிவித்தார். நாளை எனும் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு வாழ்வில் அவர்கள் உயர்ந்திட தாயும் தந்தையுமாய் என்றும் இருக்கும் திராவிட மாடல் அரசு இருக்கும் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: கவின் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 5 கோடி மானியம்... மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்...!