• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 01, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித்ஷாவின் வருகை.. ஒட்டுமொத்தமாக ஆடிப்போன திமுக.. எல்.முருகன் கடும் தாக்கு..!

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டுபோயிருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
    Author By Editor Mon, 09 Jun 2025 18:56:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-frozen-in-fear-amit-shahs-arrival-l-murugan

    டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

    amitshah

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த தி.மு.க.வும் அரண்டுபோயிருக்கிறது. எத்தனை ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது.

    இதையும் படிங்க: தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    மத்திய மந்திரி அமித்ஷாவின் பேச்சால் நடுங்கிப் போயிருக்கும் தி.மு.க.வினரின் பிதற்றல் பேச்சுகளையும், அறிக்கைகளையும் பார்த்தாலே அனைவருக்கும் தெரிகிறது. தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி அதில் 20 சதவீத்தை கூட செய்யாமல் வரலாறு காணாத ஊழல் செய்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து குடும்ப ஆட்சி நடத்தி வரும் மு.க. ஸ்டாலின், தனது ஆட்சியின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்தக் கொடூர ஆட்சியின் அவலங்களால் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    மதுபான ஊழலில் திளைத்து பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய டெல்லி முதல்-மந்திரியாக இருந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று சூளுரைத்து இருக்கிறார் அமித்ஷா.

    amitshah

    ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஊழலில் திளைத்துக் கொண்டு இருக்கிறது. டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் செய்து மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளையடித்து கொண்டிருக்கும் தி.மு.க. ஆட்சியும், டெல்லி வழியில் முடிவுக்கு வரப்போவது உறுதி. ஆம் ஆத்மி தலைவர்களைப் போலவே தி.மு.க.வினரும் சிறைக் கம்பிகளை எண்ணப்போவதும் உறுதி. இதற்கு கட்டியம் கூறும் நிகழ்வாக அமைந்துள்ளது அமித்ஷாவின் தமிழக வருகை. பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது திண்ணம்.

    ஏழை மக்களுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொடுக்கும் பணத்தை தமிழகத்தின் நலனுக்கு செலவு செய்யாமல், ஏழை, எளிய மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் தடுத்து வரும் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்களும் காத்து இருக்கின்றனர்.

    தி.மு.க. ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அடியோடு கெட்டுப்போன சட்டம் ஒழுங்கு, பாலியல் சம்பவங்களால் வெளியே நடமாட முடியாமல், பெண்கள் வீட்டிற்குள் முடங்கிப்போகும் சூழல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூலம் கரைபுரண்டு ஓடும் மதுபானம், போதைப்பொருட்களால் சீரழிவு, வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என்று, தி.மு.க.வின் கொடூர ஆட்சியை தினந்தோறும் தமிழக மக்கள் அனுபவித்து வ

    தி.மு.க. ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின் மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களுக்கு எதிராகவே வழக்கு தொடுத்து கைது செய்யும் கொடூர மதியாளர்களின் ஆட்சிதான் இது. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிரை இழக்கின்றனர். சாராய ஆலை நடத்தும் தி.மு.க. தலைவர்கள் கோடி கோடியாக குவிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அவர்கள் விற்கும் மதுபானத்தை குடிக்கும் மக்கள், தங்கள் பணத்தையும் உயிரையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.

    amitshah

    தமிழை வைத்து அரசியல் செய்யும் தி.மு.க., மருத்துவம், பொறியியல் உட்பட உயர் கல்வியை தமிழில் கற்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு இன்று வரை தி.மு.க.வினரால் பதில் சொல்ல முடியவில்லை. திராவிட மாடல் என்று வீராப்பு பேசி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இன்று வரை இதற்கு பதில் சொல்ல திராணியில்லை. பா.ஜ.க. எதிர்ப்பு என்ற பெயரில் பூச்சாண்டி அரசியல் செய்து வரும் மு.க.ஸ்டாலினின் நாடங்களை தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுமானால் நம்பலாம். தி.மு.க.வினரின் போலி திராவிட மாடல் ஏமாற்று அரசியலை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை.

    அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லும் தி.மு.க. அரசுக்கு, வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு பதிலடி கொடுக்கும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதுவார்கள்.

    ஒடிசா, அரியானா, மராட்டியம், டெல்லி வழியில் தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி வெற்றி வாகை சூடி, ஆட்சியை கைப்பற்றும். அமித்ஷா கூறியபடி, தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொருவரும் சிந்திப்போம், களப்பணியாற்றுவோம். 

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பாதுகாப்பு படை வீரர்கள் வெறியாட்டம்.. லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல்கள் க்ளோஸ்..!

    மேலும் படிங்க
    டைட்டில் அப்படித்தான் வைப்போம்.. ஆனா நாங்க தமிழுக்கு எதிரானவங்க அல்ல.. இயக்குனர் கே.பாக்யராஜ் பளீச் பேச்சு..!

    டைட்டில் அப்படித்தான் வைப்போம்.. ஆனா நாங்க தமிழுக்கு எதிரானவங்க அல்ல.. இயக்குனர் கே.பாக்யராஜ் பளீச் பேச்சு..!

    சினிமா
    பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!

    பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!

    அரசியல்
    மீண்டும் டெல்லி பயணம்.. ஆளுநர் ரவியின் பிளான் என்ன..? பரபரக்கும் அரசியல் களம்..!

    மீண்டும் டெல்லி பயணம்.. ஆளுநர் ரவியின் பிளான் என்ன..? பரபரக்கும் அரசியல் களம்..!

    அரசியல்
    #BREAKING: கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார்.. மிருகத்தனமான தாக்குதல்! நீதிபதிகள் அதிருப்தி..!

    #BREAKING: கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார்.. மிருகத்தனமான தாக்குதல்! நீதிபதிகள் அதிருப்தி..!

    தமிழ்நாடு
    என்ன மக்களே பிக்பாஸ் போலாமா..! அதிரடி அறிவிப்பு கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்..!

    என்ன மக்களே பிக்பாஸ் போலாமா..! அதிரடி அறிவிப்பு கொடுத்த தொலைக்காட்சி நிறுவனம்..!

    சினிமா
    அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... திருமண முன்பணத்தை உயர்த்தியது தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா?!!

    அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... திருமண முன்பணத்தை உயர்த்தியது தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா?!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!

    பரபரப்பை ஏற்படுத்திய அஜித் கொலை விவகாரம்.. ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது தமிழக வெற்றிக் கழகம்!!

    அரசியல்
    மீண்டும் டெல்லி பயணம்.. ஆளுநர் ரவியின் பிளான் என்ன..? பரபரக்கும் அரசியல் களம்..!

    மீண்டும் டெல்லி பயணம்.. ஆளுநர் ரவியின் பிளான் என்ன..? பரபரக்கும் அரசியல் களம்..!

    அரசியல்
    #BREAKING: கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார்.. மிருகத்தனமான தாக்குதல்! நீதிபதிகள் அதிருப்தி..!

    #BREAKING: கொலை செய்பவர் கூட இப்படி தாக்க மாட்டார்.. மிருகத்தனமான தாக்குதல்! நீதிபதிகள் அதிருப்தி..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... திருமண முன்பணத்தை உயர்த்தியது தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா?!!

    அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... திருமண முன்பணத்தை உயர்த்தியது தமிழக அரசு; எவ்வளவு தெரியுமா?!!

    தமிழ்நாடு
    இளைஞர் அஜித் கொலை வழக்கில் திடீர் திருப்பம்...  மானாமதுரை டி.எஸ்.பி. மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

    இளைஞர் அஜித் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... மானாமதுரை டி.எஸ்.பி. மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!!

    தமிழ்நாடு
    அஜித் உடம்பில் 18 காயங்கள்.. சிபிஐ விசாரணைக்கு மாற்றுங்கள்... எடப்பாடி வலியுறுத்தல்!!

    அஜித் உடம்பில் 18 காயங்கள்.. சிபிஐ விசாரணைக்கு மாற்றுங்கள்... எடப்பாடி வலியுறுத்தல்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share