ஆய்வுப் பணிகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் தோல் இல்லா காலணி ஆலையின் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தியாளர்களில் ஒன்றான தைவானைச் சேர்ந்த PouChen நிறுவனம் இந்த ஆலையை அமைக்கிறது. உலகளாவிய வரி விதிப்பு மற்றும் வர்த்தக நிச்சயமற்ற சூழல் இருந்த போதிலும், தமிழகத்தின் மீது இந்நிறுவனம் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
PouChen நிறுவனம் தமிழக அரசுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கள்ளக்குறிச்சியில் மொத்தம் ரூ.2,302 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் சுமார் 20 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் இளைஞர்களுக்கு பெரிய ஊக்கமளிக்கும் என்று முதலமைச்சர் கூறினார்.

திராவிடம் மாடல் உருவாக்கிடும் வாய்ப்புகளால் கள்ளக்குறிச்சி வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையங்கள், தரமுயரும் மருத்துவமனைகள், விளையாட்டு வளாகம், உளுந்தூர்பேட்டையில் விறுவிறுவென எழுந்து வரும் SIPCOT எனக் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேவைகள் கடந்த நான்காண்டுகளில் அக்கறையோடு தீர்க்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு கூச்சமாவே இல்லையா? தேர்தல் அறிக்கை குழு!! பொளந்து கட்டும் அண்ணாமலை!
ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் இன்றைய அரசு விழாவில் நான் திறந்து வைத்த பணிகளும், வழங்கிய நலத்திட்ட உதவிகளும், புதிய அறிவிப்புகளுமே அதற்குச் சான்று என்றும் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் கள்ளக்குறிச்சி மேலும் காணவுள்ள முன்னேற்றம் என்பது திராவிட மாடலின் சமத்துவ வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: அப்புறம் என்னப்பா... கலைஞர் அரசு போக்குவரத்து கழகம்- னு மாற்ற திட்டமா? H. ராஜா விளாசல்...!