• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை!" - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்; மேகதாது போல் வாய்மூடி இருக்காமல் அரசு கண்டனம் தெரிவிக்க வலியுறுத்தியுள்ளார்.  
    Author By Thenmozhi Kumar Sun, 16 Aug 2026 16:53:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin Slams Karnataka Forest Dept Over Shooting of 3 Tamils: Demands TN Govt Action

    கர்நாடக வனத்துறையினர் அப்பாவித் தமிழர்கள் மூவரை அநியாயமாகச் சுட்டுக் கொன்ற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், மேகதாது விவகாரத்தைப் போல இதிலும் வாய்மூடி மெளனம் காக்காமல் தமிழக அரசு தனது கடுமையான கண்டனத்தை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் மிக அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் கொடூரச் சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. மனித உயிர்கள் மீது எவ்வித மதிப்பும் மரியாதையும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று சாடியுள்ளார்.  

    3 பேர் சுட்டுக்கொலை

    மேலும் அவர் தெரிவிக்கையில், "குற்றமிழைத்த வனத்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. அத்தகைய மூடிமறைப்பு முயற்சிகளைத் தவிர்த்து, இச்சம்பவத்தை உடனடியாகக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். வெளிப்படைத்தன்மையும், பாரபட்சமற்ற தன்மையும் கொண்ட உயர்நிலை நீதி விசாரணை நடத்தப்பட்டு, இப்படுகொலைக்குக் காரணமான அனைத்து வனத்துறையினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது இத்தகைய வெறிச்செயல்களில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

    தொடர்ந்து தமிழக அரசின் நிலைப்பாட்டை விமர்சித்துப் பேசிய அவர், "மேகதாது விவகாரத்தில் காட்டியது போன்று இதிலும் செயலற்று வாய்மூடி இருக்காமல், இக்கோரச் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசிடம் தனது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக உயிரிழந்த அப்பாவித் தமிழர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில அரசிடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒருவருக்கு அரசுப் பணி கிடைக்கச் செய்யவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

    மேலும் படிங்க
    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    ஐரோப்பாவில் கோர வெப்ப அலை: 16000 பேர் பலி; பல பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ!

    உலகம்
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு
    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    ஓட்டு வங்கி ஆசையால் வந்தே மாதரத்தை மறந்த காங்கிரஸ்: சோனியா மீது அமித்ஷா ஆவேசம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share