திருப்பூர் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த புதிய திட்டப் பணிகளை அடைக்கல் நாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
61 திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 1427 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 35 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியதுடன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்ச ஸ்டாலின், ஆறுகள், மலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த உடுமலைக்கு வந்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ்க்கு வயித்தெரிச்சல்! கத்தி பொய் சொன்னா மக்கள் நம்பிடுவாங்களா? - முதல்வர்
அண்ணா, கலைஞர் படங்களில் பாடல் இயற்றிய நாராயண கவியின் சொந்த ஊர் உடுமலை என்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இனிப்பான சர்க்கரை அள்ளித் தரும் ஊர் உடுமலை என்றும் கூறினார்.
தியாகத்தின் திருவுருவமான திருப்பூர் குமரன் தோன்றிய தந்தை பெரியாரும் பிற அறிஞர் அண்ணாவும் சந்தித்த திருப்பூர் மாவட்டத்தில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இயற்கை, இலக்கியம், கலை என அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை என்று கூறினார்.

திருப்பூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். நீராறு, நல்லாறு, ஆனைமலை ஆறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
பரம்பிக்குளம் ஆறுகளில் தூர் பரப்படாமல் உள்ள வாய்க்கால்களை தூர்வார பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
நவீன வசதிகளுடன் ஒன்பது கோடி ரூபாயில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும் என்றும் ஐந்து கோடி ரூபாயில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உப்பாற்றின் குறுக்கே 7 கோடி ரூபாயில் புதிய தடுப்பணை கட்டப்படும் பொழுது முதல்வர் அறிவித்தார். மேலும், புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிக்கு நிலம் அளித்த, உடுமலைக்கு நிறைய பணிகள் செய்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்ஷா பெயரில் சாலை அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாங்க முதல்வரே! திருப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் ரோடு ஷோ... மக்கள் உற்சாக வரவேற்பு!