செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெய்மேலி பகுதியில் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிகழ்வு, மாவட்டத்தின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. இத்திட்டம் கோவளம்-மாமல்லபுரம் இடையேயான பகுதியில் அமைக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும்.
மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பின்னர் உரையாற்றினார். அப்போது திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அணைகளை பட்டியலிட்டார். நீரின்றி அமையாது உலகு என உலகப் பொதுமறையில் திருவள்ளுவர் எடுத்துக் கூறியதாக மேற்கோள் காட்டி தெரிவித்தார்.

இயற்கையோடு இணைந்தது தான் தமிழர் வாழ்வு என்றும் அதை ஒட்டியே திமுகவின் ஆட்சி நடைபெறுகிறது என்றும் கூறினார். காற்றும் நீரும் இந்த பூமியில் இருப்பதால்தான் உயிரினங்கள் உருவாகி வாழ்கிறது என்று தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் அணைகள் கட்டப்படவில்லை என பொய்யாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: ரூ. 342 கோடியில் உருவாகும் மாமல்லன் நீர்த்தேக்கம்... அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்...!
1967 - 2011 திமுக ஆட்சி காலங்களில் 43 நீர்த்தேக்க அணைகள் கட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 43 நீர் திட்டங்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்றும் கூறினார். குறித்த நேரத்தில் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்ததாகவும் கூறியுள்ளார். 459 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ரூ.342.60 கோடியில் தற்போது புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படுவதாகவும் கூறினார். 34 கிலோ மீட்டர் கரையுடன் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்..! போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது பாய்ந்த வழக்கு..! போலீஸ் அதிரடி..!