கிருஷ்ணகிரியில் 2,885 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பத்து ஆண்டுகள் அதிமுக ஆட்சியை விட நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் நெல் கொள்முதல் அதிகம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் கிருஷ்ணகிரியில் தான் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஊரகப்பகுதிகளை போல் நகரப் பகுதிகளுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது திமுக ஆட்சி தான் என்று கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் கூறினார். மேலும், ஓசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்குவதாக முதலமைச்சர் அறிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கெலமங்கலம் ஊரகப்பகுதியில் விரிவான போக்குவரத்து சாலைகள் அமைக்கத் திட்டங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவித்தார். ஓசூரில் எல் சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் கெலமங்கலத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். ஓசூரில் NH 44, 844 சாலைகளை இணைக்க புதிய சாலை அமைப்பும் சாத்திய கோழிகள் குறித்து ஆராயப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: உலகமயமானார் கருஞ்சட்டைக்காரார்!! ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் பெரியார் படம் திறப்பு!! ஸ்டாலின் பெருமிதம்!
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சிலர் பொய் கூறி வருவதாக தெரிவித்தார். வயிற்றெரிச்சல் பட்டு எதிர்க்கட்சிகள் பொய் பரப்பி வருவதாகவும், மலிவான அரசியலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிரிட்டனில் சம்பவம் செய்யும் ஸ்டாலின்!! அமைச்சர் கேத்ரினுடன் டிஸ்கஷன்! கைகொடுக்குமா ட்ரீப்?!