சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 621 காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை வழங்கிய பிறகு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது புதிதாக பொறுப்பேற்பவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரத்தை கையாள்வது குறித்து எடுத்துரைத்தார். ஒரு காவலர் தவறு செய்தாலும் அது காவல்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்துவிடும் என்று எச்சரித்தார்.
அதேபோல் காவலர் செய்யும் நல்ல விஷயம் அந்த துறைக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் கூறினார். புகார் அளிக்க வருபவர்களிடம் கருணையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த புகார்களில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். குறிப்பாக பெண்கள் புகார் அளிக்க வரும்போது மரியாதை உடன் நடத்தி புகாரை பெற்று தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவை மேம்பாலத்திற்கு சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டல்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்! யார் அவர்?
போதைப்பொருள் விவகாரத்தில் சமரசம் இன்றி செயலாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட்டு வருவதாகவும் காவலர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களது துணைக்கும் மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து காவல்துறைக்கு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.
இதையும் படிங்க: வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்கள்!! தோளோடு தோள் நின்று துணை நிற்கும் தமிழகம்! முதல்வர் உறுதி!