திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது வாக்கு திருட்டு மற்றும் பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் பாக முகவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார். திமுக பாக முகவர்கள் அமைப்பு மிக வலுவாக இருப்பது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார். களப் பணியே நமது இலக்கினை அடையும் முதல் படி என்றும் முழு வீச்சுடன் களப்பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கை பற்றி கேட்டால் மட்டும் பம்முராரு... முதல்வரை விளாசிய இபிஎஸ்..!
2026-ல் நாம் ஆட்சி அமைக்க களம் தயாராகிவிட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
மேலும், பாக முகவர்கள் நியமன பணிகளை தானே நேரில் கண்காணிப்பேன் என்றும் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்த மாதம் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி தான் சாட்சி என்றும் கூறிய முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.
தான் ஓய்வெடுக்கப் போவதில்லை என்றும் உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிக்க போவதில்லை என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசினார். தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் என்ன? திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் தீவிர ஆலோசனை