திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா என்பது தமிழ்நாட்டின் அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது கட்சியின் நிறுவன நாளையும், அதன் முன்னோடி தலைவர்களான பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாள்களையும் ஒருங்கிணைத்து கொண்டாடப்படும் ஒரு பிரமாண்டமான விழா.
இந்த விழா, திமுகவின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் பவள விழாவுடன் இணைந்து மேலும் சிறப்பு பெறுகிறது. இன்றைய தினம் கரூரில் திமுகவின் முப்பெரும் விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எப்போதும் நெருக்கடிகளுக்கு அஞ்சுகின்ற கட்சி கிடையாது என்று தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என எடப்பாடி பழனிச்சாமி உண்மையை பேசியிருப்பதாக விமர்சித்தார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க தெம்பு, திராணி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குற்றம்சாட்டினார். தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பின்றி தன்னை ஒருமையில் விமர்சிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் அதிமுகவின் தலைவராக இபிஎஸ் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: “என்னையா அழ விட்டீங்க”... திமுகவின் கூட்டணி அஸ்திவாரத்தை அசைக்க ஆரம்பித்த கே.எஸ்.அழகிரி... போட்டாரே ஒரு போடு...!
அண்ணாயிசம் பேசிய அதிமுகவினரை அடிமையிசம் பேச வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி முகத்தை மூடி கொண்டதாக வெளியான சம்பவம் தொடர்பாக பேசிய முதலமைச்சர், காலில் விழுந்த பிறகு முகத்தை மூடி கர்சிப் எதற்கு என் மக்கள் கேட்பதாக சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டைக் காவல்காக்கும் அரணாக திமுக விளங்குவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக- ன்னா சும்மாவா? இந்த 76 வருஷமும்...! மார்தட்டிய முதல்வர் ஸ்டாலின்