சென்னை நீலாங்கரையில் திமுக எம்.பி. என்.ஆர் இளங்கோவின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, கலைஞர் மீதும், திமுக மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ என்று கூறினார். என்.ஆர். இளங்கோவுக்கு அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர் கருணாநிதி என்றார்.
தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் இளங்கோ வைத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.
மணமக்களை வாழ்த்தி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: TNPSC குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின… அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!

மேலும், வாக்குத்திருட்டிற்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்தும் பேரணிக்கு பங்கேற்றத்தை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் தற்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். பீகாரில் ஏற்பட்ட நிலை தமிழ்நாட்டிற்கும் வந்து விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட வருகின்றன என்றும் நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்துக்கு ஒரு வார கால பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார். நான்காண்டு காலத்தில் 10 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தான் NO.1.. மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின்..!!