இந்தியாவின் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசியல் வாழ்க்கையின் அசைக்க முடியாத தூண்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் ஒரு தலைவராக உலக அளவில் அறியப்படுகிறார். நரேந்திர மோடி, ஒரு க்ராசரி கடை நடத்தும் குஜராத்திய இந்து குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமோதர்தாஸ் மோடி, வடநகர் ரயில்வே நிலையத்தில் ஒரு டீ ஸ்டால் இயக்கினார்.
குழந்தைப் பருவத்தில், மோடி அடிக்கடி தனது தந்தையுடன் இணைந்து டீ விற்பனையில் உதவியதாக அவர் தானே கூறியுள்ளார். மோடியின் அரசியல் வாழ்க்கை, பாரதீய ஜனதா கட்சியுடன் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்தது. 1980களில் கட்சியின் பிராந்திய அளவிலான பணியாளராகத் தொடங்கி, 2001இல் குஜராத் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவர் மூன்று முறை தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்தார் (2001-2014), இது காலத்தில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. 2014இல், அவர் பிரதமராகப் பொறுப்பேற்று, 2019 மற்றும் 2024 தேர்தல்களில் தனது கட்சி-கூட்டணியை வெற்றிப் பெறச் செய்தார்.
இதையும் படிங்க: மறுபடியும் சொல்றேன்.. வீக்கான பிரதமர்: H1B விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சனம்..!!
பிரதமர் மோடி குறித்து உள்நாட்டில் பல அரசியல் முரண்கள் இருந்தாலும் வெளிநாடுகளில் அதிகம் அறியப்படும் பிரதமர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் இதனை பிரதிபலிக்கின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியை உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழ்ந்து பேசி உள்ளார். கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காதவர் பிரதமர் மோடி தான் என்று புகழாரம் சூட்டினார். அவரது எனர்ஜி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒரு சின்ன சிப் உலகத்தையே மாத்த போகுது!! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மோடி!! மாஸ்!