பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை திட்டம் 46.7 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,853 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இது மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளை இணைக்கும் தற்போதைய இருவழிச் சாலையை மேம்படுத்துவதற்கான திட்டம்.

இந்த 4 வழிச்சாலையால் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவ முடியும்., பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்., சுற்றுலாவை மேம்படுத்தும், குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி போன்ற புனித தலங்களுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என கூறப்பட்டு உள்ளன.

மதுரை முதல் பரமக்குடி வரை ஏற்கனவே 4 வழிச்சாலை உள்ளது, இந்த புதிய திட்டம் அதை ராமநாதபுரம் வரை நீட்டிக்கும். மேலும், ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரை நெடுஞ்சாலையை விரிவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும் எனவும் கூறி இருந்தார்.

இது தொடர்பான அவரது பதிவில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி. பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும். இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது அறிவிப்பை சுட்டிக்காட்டி வரவேற்று தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் நம் பாரதப் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டம் தமிழ்நாட்டில் எதிரொலிக்கிறது என்று தெரிவித்தார் . ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுமென்றே குற்றம்சாட்டி கொண்டு இருப்பதாகவும், இருப்பினும் வளர்ச்சி மூலம் தமிழக மக்களின் மனதில் பிரதமர் மோடி இடம் பிடிப்பார் என்றும் கூறினார். மேலும், திராவிட மாடல் அரசு மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் தளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.