எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஒன்றியம் வாரியாக அதிமுக நிர்வாகிகள் ஒன்றாக கூடி அந்தந்த கிராமத்தின் பெயரைச் சொல்லி 6 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தை பங்கிட்டு கொள்ளும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு இருந்தார். இதற்கு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கந்தர்வோட்டையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டு ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு சென்றவுடன் சிறிது நேரத்திலேய கந்தர்வகோட்டை தொகுதியைச் சேர்ந்த அதிமுகவின் பல்வேறு ஒன்றியங்களுக்கும் தலா 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: “கரை வேட்டியைக் கழட்டி ரோட்டுல போடு”... எம்.ஜி.ஆர். சிலை முன்பு அதிமுக தொண்டர் அரை நிர்வாண போராட்டம்...!
அதை பொதுக்கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்ட பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக அதிமுக நிர்வாகிகள் பணத்தை பங்கு போடும் காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட சில கிராமங்களின் பெயர்களை கூறி ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை பேர் வருகை புரிந்தனர் அந்த கணக்கின்படி அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் குறித்து பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: எழுதி கொடுத்து படிக்க ஸ்டாலினா? மனசுல பட்டத பேசுற இபிஎஸ்! வலுக்கும் விமர்சனங்கள்