நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள கேள்வித்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை ஜூலை 24 அன்று நாடு தழுவிய அமைதி வழி போராட்டத்திற்கு இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
மாவட்ட தலைநகரங்கள் உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து தொடர்ந்து நீதி கோரும் குரல்கள் உள்ளன. பல மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொறுப்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம் படிப்படியாக வலுப்பெற்று, பாராளுமன்ற நோக்கிய பேரணியாக மாறியது. போலீஸ் நடவடிக்கைகள், உரையாடல்கள் உள்ளிட்ட சம்பவங்களுக்கு மத்தியிலும் CJP தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. நீட் எதிர்ப்பு விவகாரம் தொடர்பாக MP சு. வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வருகிறது புதிய சட்டம்... நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... நாடே பரபரப்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி...!
நள்ளிரவில் பிரதமர் மோடி உமிழ்ந்த பொய்கள் பட்டப்பகலில் அமைச்சர்கள் கூறும் பொய்களை மிஞ்சுவதாக தெரிவித்தார். மாணவர்கள் போராட்டம் தொடரும் நிலையில், 100க்கும் மேற்பட்ட ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தும் விவாதிக்க அனுமதியில்லை என்று சுட்டிக் காட்டினார். நாம் முறையாக விவாதிக்காவிடில் நாம்தான் நாட்டுக்கு தவறான செய்தியை அனுப்புபவராக இருப்போம் என அமைச்சர் கூறுவதாக கூறினார். அமைச்சர் கிரண் ரிஜிஜூ மக்களவையில் பேசிய வீடியோவை பகிர்ந்து மதுரை MP சு. வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கலவரமாக நினைக்காதீங்க..! மாணவர் நலனில் சமரசம் கிடையாது... நயினார் நாகேந்திரன் உறுதி.!