சென்னையின் தெற்குச் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ள தாம்பரம் மற்றும் அதன் அருகிலுள்ள முடிச்சூர், ஒவ்வொரு பருவமழையிலும் வெள்ளத்தின் கொடுமைகளைச் சந்திக்கும் இடங்கள். இந்தப் பகுதிகள், நகரின் விரிவடைவு, தவறான திட்டமிடல் மற்றும் இயற்கை நீர்நிலைகளின் அழிவால், குறுகிய மழைக்குப் பின் கூட தண்ணீர் தேங்கி, வீடுகளுக்குள் நுழைந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து விடுகின்றன.
முடிச்சூரில், அடையாறு ஆற்றை ஒட்டிய குடியிருப்புகள், ஒவ்வொரு மழையிலும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. 2025 அக்டோபரில், இன்னும் சமீபத்தில் பெய்த கனமழைக்குப் பின், இந்தப் பிரச்சினை மீண்டும் தலையெடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! இத்தனை கோடியா..!! தமிழகத்தில் மது விற்பனை அமோகம்..!!
தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில் மழை வெளுக்க தொடங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை தொடங்கியதை அடுத்து வீடுகளை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர். கீழ் தளங்களில் வசிக்கும் மக்கள் பொருட்களை மாற்று இடத்திற்கு எடுத்து வைத்துவிட்டு காலி செய்கின்றனர். பொருட்களை பாதுகாப்பாக எடுத்து வைக்கும் மக்கள் தங்கள் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மாற்று இடத்திற்கு செல்கின்றனர்.
இதையும் படிங்க: மழை தீவிரம் அதிகமா இருக்கு… போர்கால நடவடிக்கை எடுங்க… EPS வார்னிங்…!