திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த வருடம் கடந்த 03ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அன்னதானம் நிகழ்ச்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. நாளை பகல் சப்பரத்துடன் திருவிழா நிறைவடைகிறது.
இன்று (05.08.25) காலை முதல் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் இஸ்லாமியர்கள் என மும்மதத்தை சார்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் தேவாலயத்திற்கு வந்து செபஸ்தியாரை வழிபட்டுச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா? கோர்ட்டில் குட்டு வாங்கும் திமுக...விமர்சித்த அதிமுக
புனித செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள், தங்களது வேண்டுதலை செபஸ்தியார் நிவர்த்தி செய்து கொடுத்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அரிசி ஆடு, கோழி, தக்காளி, வெங்காயம், கத்திரிக்காய், மிளகாய், இஞ்சி, பூண்டு என காய்கறிகள் ஆகியவற்றை நேர்த்தி கடனாக செலுத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருக்கக்கூடிய தம்பதியினர் செபஸ்தியாரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை பெற்றவுடன் குழந்தையை கோவிலுக்கு கொண்டு வந்து கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து. கோவில் வளாகத்தில் ஏலம் விட்டு அவர்களது உறவினர்களே ஏலத்தில் கலந்து கொண்டு குழந்தையை எடுத்துச் சொல்கின்றனர்.
ஏலம் விடப்பட்ட குழந்தைகள் ரூ100 முதல் ரூ 5,000 வரை இன்று ஏலம் போனது. ஏலத் தொகையை கோவில் செலுத்தி விடுகின்றனர். குழந்தைகளை ஏலம் விட்டு அவர்களே எடுத்துச் செல்லும் வினோத திருவிழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மாடு மேய்க்க இவ்வளவு காஸ்ட்லி கெட்டப்பா? - செட்டப் சீமானின் டீ ஷர்ட், ஷூ விலையைக் கேட்டு ஆடிப்போன நெட்டிசன்கள்...!