2022 உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் மகேஷ் நாகர்கோவில் மாநகராட்சி மேயராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட நாகர்கோவிலை திமுக கைப்பற்றியதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. மேயராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் நகரின் வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். மழைநீர் வடிகால் பணிகள், சாலை மேம்பாடு, குப்பை மேலாண்மை, பொதுமக்கள் புகார் தீர்வு கூட்டங்கள் போன்றவற்றை தொடர்ந்து மேற்கொண்டார்.
மாநகராட்சி ஆணையருடன் இணைந்து பல்வேறு அடிப்படை வசதி திட்டங்களை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவின் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்த அவர், உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார்.

2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். மற்ற தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் சீட் எதிர்பார்த்த நிலையில், தலைமை கடைசி நேரத்தில் கன்னியாகுமரி தொகுதியை அவருக்கு ஒதுக்கியது. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் போன்ற மூத்த தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்ட சூழலில், மகேஷுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: நியூயார்க் நகர மேயர் இல்லம் முன்பு வெடிகுண்டு வீச்சு..!! இருவர் கைது.. பரபரப்பு சம்பவம்..!!
இந்த நிலையில், நாகர்கோவில் மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் வழங்கினார். கன்னியாகுமரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால் தனது மேயர் பதவியை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: BRAIN இருக்கா..? மண்குதிரை ஸ்டாலின்..! போட்டு உடைத்த ஆ.ராசா…! பூந்து விளாசிய அதிமுக..!!