தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் திமுக எனும் நஞ்சுக்கொடி தமிழகத்தில் படரவிடக்கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.ராயபுரத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூய்மை பணியாளராக 11 ஆண்டுகளாக பணியாற்றிய ரவிக்குமார் ஆறு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் விரத்தியில் விபரீத முடிவு எடுத்ததாகவும் தூய்மை பணிகளை தனியார் மையமாக்கும் விவகாரத்தால் விரக்தியில் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதமாக ஊதியம் கிடைக்காமல் பணி இல்லாமல் அவர் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே,கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சியால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ரவிக்குமார் என்ற தூய்மைப் பணியாளர், மிகுந்த மன உளைச்சலின் காரணமாகத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொத்து கொத்தாய் வாக்காளர்கள் நீக்கம்... நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியிலேயே ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்...!
ஆளும் அரசின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும் பல அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாகி வருவது நெஞ்சை கனக்கச் செய்கிறது என்றும் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடுபவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் இந்த மக்கள் விரோத அரசை இனி எதிர்க்க முடியாது என நம்பிக்கையிழக்கும் சாமானியர்கள், தற்கொலையைத் துணையாக நாடுவது மனித இனத்திற்கே ஆபத்தானது எனவும் கூறினார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் அழிவின் விளிம்பை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லும் திமுக எனும் நஞ்சுக்கொடியை இனியும் தமிழகத்தில் படரவிடக்கூடாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குப்பைகளை அகற்ற திராணி இல்லையா இல்ல மனசு இல்லையா? அண்ணாமலை கைது… நயினார் கடும் கண்டனம்…!