அதிமுக மீதான அதிருப்தியில் முன்னாள் எம்பி அன்வர் ராஜா தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது ஏன் என அன்வர் ராஜா விளக்கம் அளித்தார். அப்போது, அதிமுகவை சீரழிக்க வேண்டும் என்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் நெகட்டிவ் சக்தி, மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். தனது கொள்கையிலிருந்து தடம் புரண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவும், ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்து தான் தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பதாகவும் கூறினார்.
முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடி பழனிச்சாமியை ஒரு இடத்தில் கூட அமித்ஷா கூறவில்லை என்றும் மூன்று முறை கூட்டணி குறித்து பேட்டி அளித்த அமித் ஷா, இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

எந்த கட்சியில் இணைந்தாலும் அக்கட்சியை சீரழிப்பது தான் பாஜகவின் வேலை என்றும் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பலமுறை கூறியும் முதல்வர் வேட்பாளர் நான்தான் என இபிஎஸ்- ஆல் கூற முடியவில்லை என்றும் அன்வர் ராஜா தெரிவித்தார். பாஜக உடனான கூட்டணி தொடர்பாக தனது ஆதங்கத்தை பலமுறை தெரிவித்தும் அதிமுக கண்டுகொள்ளவில்லை என அவர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுக பாஜக கூட்டணி அமைந்தது என்றார்.
இதையும் படிங்க: ஸ்டாலினே மீண்டும் ஆட்சி அமைப்பார்..! Ex எம்.பி அன்வர் ராஜா உறுதி..!
அப்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்த போது அதிமுகவில் இருந்தவர் அன்வர் ராஜா என கூறிய அவர், இப்போது அவருக்கு என்ன பிரச்சனை என கேட்டார். பாஜகவை பொறுத்தவரை உலகத்தின் மிகப்பெரிய கட்சி என்றும் மிகப் பெரிய தலைவர், வாழும் ராஜேந்திர சோழராக நரேந்திர மோடி திகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார். அவரால் நல்லது நடக்குமே தவிர ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்துக்கும் நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவில் இணைந்த EX. எம்பி அன்வர் ராஜா.. முதல்வர் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்..!