குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சிப் பாகுபாடு இன்றி சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது. பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, என் டி ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். எதிர்க்கட்சியினர் சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மயில்சாமி அண்ணாதுரை, திருச்சி சிவா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: நாங்க பாகுபாடு காட்டியது இல்ல... ராகுல் குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையம்!
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மயில்சாமி அண்ணாதுரை இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் நோக்கம் என்று தெரிவித்தார். என்டிஏ தமிழரை அறிவித்த பிறகு, இந்தியா கூட்டணியும் தமிழரை அறிவித்தால் போட்டியாகவே இருக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அவங்க பண்றது சரியா? முதல் நாளில் இருந்தே பார்லிமென்ட்டை செயல்பட விடல.. பாஜக எம்.பி விளாசல்..!