நாமக்கல், தமிழ்நாட்டின் “முட்டைத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன, தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழகம், கேரளா, மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு தினசரி சுமார் 60 லட்சம் முட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு தினசரி சுமார் 70 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பண்ணை கொள்முதல் முட்டை விலையை தினசரி தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. முக்கிய திருவிழா காலங்களில் முட்டை நுகர்வு குறைவதால், விற்பனை குறைந்து முட்டை விலை சரிவடைகிறது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுதிமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா வழியில் சீனா அதிரடி!! அமெரிக்காவுக்கு கொடுத்த THUG ரிப்ளை!!
அந்த வகையில் கடந்த ஜூன் 15ம் தேதி, முதல்முறையாக நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவுக்கு 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தலா 4.75 லட்சம் வீதம் 20 குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கன்டெய்னர் 30 நாட்களில் அமெரிக்கா சென்றது. இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில் முதற்கட்டமாக 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இதன்மூலம் அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கும் என பண்ணையாளர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதித்ததால், நாமக்கலில் இருந்து முட்டை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு உள்ளூர் கோழிப்பண்ணை உரிமையாளர்களையும், விவசாயிகளையும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

டிரம்பின் இந்த வரி விதிப்பு திருப்பூரில் பின்னாலடை தொழிலுக்கு பேரிடியாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது. அண்டை நாடுகளை விட அதிக வரி விதிப்பு உள்ளதன் காரணமாக இந்திய முட்டைகளை வாங்க அமெரிக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் முட்டை ஏற்றுமதி தடைபட்டு உள்ளதாக நாமக்கல் பகுதியை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலையில் உள்ளனர்.
அமெரிக்காவின் வரி உயர்வால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், பண்ணையாளர்கள் பொருளாதார இழப்பை எதிர்கொள்கின்றனர். இதற்கு தீர்வாக, இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாசத்துக்கு ஒரு போரை நிப்பாட்டி இருக்கேன்.. லட்சக்கணக்கான பேரை காப்பத்தினேன்.. பெருமை பீற்றும் ட்ரம்ப்..!