விழுப்புரம் மாவட்ம் செஞ்சி அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற சீமான், மேடையில் பேச தொடங்கியுடன் கீழே சலசலப்பு ஏற்பட்டதால், ஆவேசமாக கீழே இறங்கி வந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் தற்போது முக்கிய அரசியல் கட்சியாக இயங்கி வரும் நாம் தமிழர் கட்சி, மற்ற கட்சிகளை போல் தேர்தல் பிரச்சரங்களை தொடங்கியுள்ள நிலையில், சமீப காலமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பல சர்ச்கைகளில் சிக்கி வருகிறார். பெரியார் குறித்து அவதூறாக பேசியது தொடங்கி திருச்சி போலீஸ் வருண்குமாருடன் மோதல்வரை பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் மேடையில் பேசியபோது நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள கோட்டையை யுனஸ்கோ நிறுவனம்உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பில், செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: தரமான கல்வி கொடுக்க முடியல.. இதுதான் திராவிட மாடலா? திமுகவை வறுத்தெடுத்த சீமான்..!
அதனைத் தொடர்ந்து நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செஞ்சிக்கோட்டையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட கோட்டை என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்தும், செஞ்சிக்கோட்டை தமிழ் முன்னோர்களான கோனேரி கோன் என்பவர் ஆட்சி செய்த கோட்டை என பிரகடப்படுத்த கோரியும் மீட்பு போராட்ட பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் பாதுகாப்பு பவுன்சர்களால் தடுத்து நிறுத்தி வெளியேற்றப்பட்டனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும் செய்தியாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டதோடு, ஆத்திரமடைந்த செய்தியாளர்கள் சீமானின் செய்தியை சேகரிக்காமல் புறக்கணித்தனர்.
சீமான் பேச தொடங்கியபோது செய்தியாளர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, பவுன்சர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் பவுன்சர் மற்றும் செய்தியாளர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், மேடையில் பேசிய சீமான், பேச்சை நிறுத்திவிட்டு, ஆவேசமாக, அவர்களைத் தாக்குவது போல் வேகமாகப் பாய்ந்துகொண்டு வந்தார். அவரை கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சீமான் நடந்துகொண்ட விதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், சீமான் பேசத்தொடங்கும் போது மேடைக்கு கீழே சலசலப்பு நிலவியது. இதனால் ஆத்திரமடைந்த சீமான், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து ஆவேசமாக தொண்டரை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே செய்தியாளர்களை செய்தி எடுக்க தடை செய்து பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து கட்சி தலைவரும் மேடையில் இருந்து கீழே இறங்கி தொண்டரை தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
என்ன #சீமான் இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காரு 🥶
Worst behavior from him..👎🏻#Seeman pic.twitter.com/JX9N4xI21C
— தளபதி ரிஷி (@ThalapathiRISHI) August 17, 2025
இதையும் படிங்க: சொல்லுங்கய்யா... எங்கள இப்படி பாடா படுத்துறாங்க! சீமானிடம் கதறிய தூய்மை பணியாளர்கள்..!