தேசிய தேர்வு முகமை அறிவிப்பின்படி இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் அதில் முறைகேடுகள் இருப்பதாக பல்வேறு புகார்கள் வெளியானதை தொடர்ந்து தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு ரத்து செய்து உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் நீட் தேர்வு வருகின்ற 21ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற இருக்கிறது. நெல்லை மாவட்டத்திலும் 13,000 க்கு மேல் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர்.
மேலும் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பான முறையில் அனைத்து மையங்களுக்கும் கொண்டு செல்வதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... புதிய இணையதளம் தொடக்கம்... எதற்காக தெரியுமா?
அதில் ஒன்றாக மதுரையிலிருந்து நெல்லைக்கு வருகின்ற நீட் தேர்வு வினாத்தாள்களை ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டு வருவதற்கு அதன் அலுவலர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல் கட்டமாக இராணுவ ஹெலிகாப்டர் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலையில் மீண்டும் மதுரையில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்கள் ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கிருந்து காவல்துறை வாகனங்கள் மூலமாக தேர்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதேபோல், நீட் வினாத்தாள் ராணுவ விமான மூலம் சேலம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிஐஎஸ்எப் போலீஸ் பாதுகாப்புடன் சேலம் , நாமக்கல், தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது ரகசியமாக உள்ளது.
இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டிலையே இல்லையே... முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தவெக செய்யப்போகும் தரமான சம்பவம்... ஷாக்கில் மத்திய அரசு...!