நீட் தேர்வு பிரச்சனை தலைதூக்கி வரும் நிலையில், மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்து வருவது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. பல்லாவரத்தில் நீட் தேர்வு அழுத்தத்தால் சாய் அபினவ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
"இனி ஒரு உயிர்கூட நீட் தேர்வால் போகக்கூடாது" என்று மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி போராடி வருகிறோம் என்றும் ஆனால், கல்நெஞ்சம் கொண்ட மோடி அரசு அதை ஒரு துளியும் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை எனவும் தெரிவித்தார்.

இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவைப்படுகிறது? என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். மாணவர்களின் தொடர் மரணங்களை ஒரு தீவிரமான பிரச்சினையாகவே கருதாமல், தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: கூட்டணிக்கு என்ன பெயர்..? பரபரப்பை கிளப்பிய செப்.9..!! மாணிக்கம் தாகூர் தகவல்..!!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறிய அவர், ஒருபோதும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்காதீர்கள்! இந்த அநீதியான நீட் தேர்வுக்கு எதிராக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடி நிச்சயம் தீர்வு காண்போம் என்று மாணிக்கம் தாகூர் கூறினார். நாங்கள் உங்கள் பக்கம் என்றும் துணை நிற்போம் என்றும் மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அபராதம்... பிரதமர் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி.!!