• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்று வெட்டிய அதே இடத்தில்... நெல்லையை உலுக்கிய இரட்டைக்கொலை... பகை வளர்ந்ததன் பகீர் பின்னணி...!

    கார் மோதி இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்
    Author By Amaravathi Fri, 03 Jul 2026 07:39:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nellai double murder background

    வீரவநல்லூர் அருகே தந்தை, சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம்; தண்ணீர் பிரச்சனைக்காக பழிக்கு பலியாக நடந்த கொலையின் தொடர்ச்சியாக இன்று நடந்த இரட்டை கொலை சம்பவத்துடன் சேர்த்து 9 பேர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள மூலச்சி பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தனது இரண்டு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வீரவநல்லூர் - மூலச்சி சாலையில் தோட்டத்திற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வல்லத்து நம்பி குளம் அருகே பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் காரைக் கொண்டு காளிமுத்து சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காளிமுத்துவை சரமாரியாக வெட்டி தலையை துண்டாக்கி கொலை செய்தது. மேலும் கார் இடித்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த காளிமுத்துவின் இரண்டாவது மகன் ஜெயராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பின்னால் இருந்த மூத்த மகன் சின்னத்துரை உடலில் காயங்களுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் அவரை அங்கே விட்டுவிட்டு காளிமுத்துவின் தலையை துண்டாக்கி சிறிது தூரத்தில் நெடுஞ்சாலை பகுதிக்கு கொண்டு சென்று பையில் வைத்துவிட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது. இந்த நிலையில் சம்பவம் குறித்த தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சென்ற வீரவநல்லூர் போலீசார் உடல்களை மீட்டு வழக்கு பதிவு செய்து கொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிர படுத்தியதோடு படுகாயம் அடைந்த சின்னதுரையை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: நெல்லையில் ரத்த வெறி... தந்தை-மகன் கொடூரக் கொலை..! தலையை வெட்டி நடுரோட்டில் வைத்து சென்ற மர்ம கும்பல்..!!

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் பாண்டியன் கொலை சம்பவத்தின் பழிக்கு பலியாக இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது கண்டறியப்பட்டது. கொலை நடந்த இடத்தில் நெல்லை நரக டி ஐ ஜி திருநாவுக்கரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் சுப்பிரமணிய சாஸ்திரி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தி கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டனர் தொடர்ந்து சுமார் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கொலையாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடைய அறிவியல் நிபுணர்கள் தடையங்களை சேகரித்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் மூலச்சி பகுதியைச் சேர்ந்த சித்திரபுத்திரன்(72) என்பவரும், பெருமாள் பாண்டியன் (45) என்பவரும் உறவினர் ஆவார்கள். கடந்த 2006ம் ஆண்டு சித்ர புத்திரனின் மகன் சுப்பிரமணியனின் மனைவிக்கும் பெருமாள் பாண்டியன் மனைவிக்கும் இடையே ஓடை தண்ணீர் செல்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த சூழலில் இந்த முன்விரதம் காரணமாக 2007 ஆம் ஆண்டு சுப்ரமணியனை பெருமாள் பாண்டியன் தரப்பினர் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பெருமாள் பாண்டியன் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் கையெழுத்திட சாத்தான்குளம் பகுதியில் தங்கி இருந்தார். அப்போது அவரை சித்ரபுத்திரன் தரப்பினர் 2008 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்றனர். அன்றைய தினம் சித்திரபுத்திரன் தரப்பைச் சேர்ந்த பெருமாள், பாபநாசம் ஆகியோரை பெருமாள் பாண்டியன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர்.

    அதே ஆண்டு பெருமாள் பாண்டியனிடம் கொலை தொடர்பான தகவல்களை தெரிவித்ததாக சுப்பையா என்பவரை சித்ரபுத்திரன் தரப்பினர் கொலை செய்தனர். 2009 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பெருமாள் பாண்டியின் உறவினர் சின்னத்தம்பியை சித்திரபுத்திரன் தரப்பினர் கொலை செய்தனர். ஏற்கனவே தப்பிய பெருமாள் பாண்டியனை 2010 ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது சித்திரபுத்திரன் தரப்பினர் வெட்டி படுகொலை செய்தனர். அதாவது தற்போது நடைபெற்ற கொலை சம்பவத்தை போல் அம்பாஸ்டர் காரால் மோதி அப்போது கொலை செய்துள்ளனர். இந்த கொலைக்கு பழிக்கு பலியாக பெருமாள் பாண்டியன் தரப்பினர் சித்திரபுத்திரனின் மருமகன் குமாரை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திண்டுக்கலில் வைத்து கொலை செய்தனர். மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு வரை இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது அரிவாள் வெட்டு சம்பவங்களும் நடந்துள்ளன. 

    பெருமாள் பாண்டியன் கொலையில் கைதான முக்கிய குற்றவாளியான காளிமுத்து மற்றும் அவரது ஐந்து வயது மகனை இன்றைய தினம் மர்ம நபர்கள் பெருமாள் பாண்டிய கொலை செய்தது போல் காரை வைத்து மோதி கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ஓடை பிரச்சனை சிறிய வாக்குவாதமாக தொடங்கி முன் விரோதமாக மாறி இதுவரை 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  இரு தரப்பும் சமரசமாக சென்ற நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடந்தது எதற்காக என்பது குறித்தான விசாரணையை போலீசார் தீவிர படுத்தி உள்ளனர்..
     
    இதையும் படிங்க: நெல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்..! ஆதாரங்களை வெளியிட்ட காவல்துறை..!

    மேலும் படிங்க
    கல்வி கட்டணம் நிர்ணயம்... மீறினால் அவ்ளோ தான்..! தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..!

    கல்வி கட்டணம் நிர்ணயம்... மீறினால் அவ்ளோ தான்..! தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!

    அரசியல்
    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” -  அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    தமிழ்நாடு
    மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!

    மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்..!!

    இன்றைய ராசிபலன் (03-07-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    கல்வி கட்டணம் நிர்ணயம்... மீறினால் அவ்ளோ தான்..! தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..!

    கல்வி கட்டணம் நிர்ணயம்... மீறினால் அவ்ளோ தான்..! தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது?... சல்லடை போட்டு சலித்தெடுக்கும் காவல்துறை... வெளியான பகீர் பின்னணி...!

    அரசியல்
    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” -  அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    “500 மீட்டருக்கு தடை; இன்று மாலை 6 மணி வரை கெடு...” - அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    புதரை தோண்ட தோண்ட கிடைத்த பொக்கிஷங்கள்... ஆச்சர்யத்தில் உறைந்து போன மன்னார்குடி...!

    தமிழ்நாடு
    மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!

    மக்களே தப்பித் தவறிக்கூட அந்த பக்கம் போகாதீங்க... வைகை அணையில் மறைந்திருக்கும் பேராபத்து...!

    தமிழ்நாடு
    மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    மாநில உரிமைகளை தாரை வார்த்த தவெக அரசு! ஆளுநர் அர்லேகர் மதுரை ஆய்வுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share