நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் நந்தாதேவி என்ற தனியார் ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் அந்த சம்பந்தப்பட்ட ஆலைக்கு உடனடியாக இது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புவதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் கங்கைகொண்டான் சிப்கார்ட் தொழிற்பேட்டையில் நந்தாதேவி பயோ ப்ராடக்ட்ஸ் என்ற பெயரில் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் பயோ எத்தனாலால் ஆலையிலிருந்து வெளியேறும் கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக திருநெல்வேலியின் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவத்தவா மற்றும் நீதிபதி பூர்ணிமா அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த ஆலை செயல்பட தொடங்கிய முதல் நாளிலிருந்தே அதிலிருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். சுற்றுவற்றார கிராம பகுதிகளான கங்கை கொன்றான், ராஜபதி, தியாகராஜ நகர், ஐயனார் குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த துர்நாற்றத்தால் வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக பலமுறை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: 'எனக்கு எம்எல்ஏ டிக்கெட் தர வரை நகர மாட்டேன்' - முதல்வர் வீட்டின் முன் அமர்ந்து சிட்டிங் எம்எல்ஏ அதகளம்...!
ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான முத்துராமன் என்பவர் அந்தஆலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நந்தாதேவி ஆலை உரிய பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தாமலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை முறையாக பின்பற்றாமலும் செயல்பட்டு வருவதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மிகுந்த நச்சு வாயுவால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினார். எனவே அந்த ஆலையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், நெல்லை இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர், நெல்லை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், நந்தா தேவி ஆலை நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்! கரூர் சம்பவம் இனி சிபிஐ வசம்... ஆவணங்கள் அனைத்தும் ஒப்படைப்பு...!