பள்ளி மாணவர்களிடையே வன்முறை எண்ணங்கள் என்பது உலகளவில் கவனம் பெற்று வரும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாகும். இது மாணவர்களின் மனநலம், கல்வி முன்னேற்றம், சமூக உறவுகள் மற்றும் பள்ளி சூழலின் பாதுகாப்பு ஆகியவற்றை நேரடியாகப் பாதிக்கிறது. இந்தப் பிரச்சினை சிக்கலானது மற்றும் பல்வேறு உளவியல், சமூக, குடும்ப, மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகிறது.
வன்முறை எண்ணங்களின் தோற்றத்திற்கு ஒரே காரணத்தை மட்டும் குறிப்பிட முடியாது; இது பல காரணிகளின் கலவை. முதலாவதாக, உளவியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு, அல்லது கோப மேலாண்மை பிரச்சினைகள் உள்ள மாணவர்கள் வன்முறை எண்ணங்களுக்கு ஆளாக்குகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம் போல் வந்த போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையில் புத்தகங்களுக்கு இடையில் கத்தி ஒன்று மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை ஆசிரியர் ஒருவர் கண்டுபிடித்து உடனே தலைமையாசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்ததுடன் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவர் இதற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டியதால் தன்னை ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் தானும் முன்னெச்சரிக்கையாக புத்தகப்பையில் கத்தியை மறைத்துக் கொண்டு வந்ததாக அந்த மாணவர் கூறியதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: நாளை நெல்லை வரும் அமித் ஷா... இன்று தமிழக பாஜக தலையில் இறங்கியது பேரிடி... பறந்தது அதிரடி உத்தரவு...!
இதைக் கேட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மாணவனை எச்சரித்த போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். புத்தகப் பையில் மாணவர் ஒருவர் கத்தியை மறைத்து கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நெல்லை ஆணவக்கொலை வழக்கு: உடந்தையாக இருந்த சுர்ஜித் சகோதரர் அதிரடி கைது..!!