தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் மின்வெட்டு இரவு நேரங்களில் ஏற்படுவதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
அவ்வப்போது மின்துறையில் பிரச்சனைகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வந்தாலும் வேண்டுமென்றே மின்வெட்டு சிலர் ஏற்படுத்துவதாகவும் போராட்டங்களை கட்டவிழ்த்து விடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மின் துறையில் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் தேவையானவை செய்து தரப்படும் என்று கூறினார்.

மின்வெட்டு அதற்கான காரணம் என்ன என்பதை எல்லாம் உடனடியாக வெளிப்படுத்தி வருகிறோம் என்றார். சோலார் உற்பத்தியை பெருக்கி மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வோம் என்று உறுதி அளித்து உள்ளார். திட்டமிட்டு பியூஸ் ஸ்கரியர் பிடுங்கப்படுகிறது என்றும் திட்டமிட்டு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "வாயில நல்லா வந்துடும்".. முதல்வர் பேச்சால் சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!
பியூஸ் கேரியர் பிடுங்குவோர் சிலரை சிசிடிவி அடிப்படையில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ள அமைச்ச நிர்மல் குமார், பெரம்பூரில் 40 நிமிடங்களில் சரி செய்யப்பட்டாலுமே சிலரின் தூண்டுதல் பெயரில் போராட்டம் நடந்தது என்றார். இரவு நேரங்களில் மின்வினியோகம் தடை விவகாரத்தில் குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் மின்வெட்டு தொடர்பாக மின்னகத்தின் மூலமே புகார்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் ஆய்வில் அம்பலமான முறைகேடுகள்..! அதிரடி சஸ்பெண்ட்..! தமிழக சட்டத்துறையில் அதிர்ச்சி..!!