சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் வரலாறு காணாத பெருமழை கொட்டித் தீர்த்துள்ள போதிலும், இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்திடமிருந்து அரசுக்கு எவ்வித முன்கூட்டிய எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்றும், இருப்பினும் முன்னறிவிப்பின்றி பெய்த கனமழையை அரசு நிர்வாகம் மிகச் சிறப்பான முறையில் கையாண்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்; மேலும், முந்தைய ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிக்கப்படாததே மருத்துவமனைகளில் மழைநீர் தேங்குவதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள டிஎம்எஸ் (DMS) வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் மற்றும் கட்டுப்பாட்டு மையச் செயல்பாடுகள் குறித்த கள ஆய்வு அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களின் மருத்துவ அலுவலர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்த முக்கியத் தகவல்கள்:
"வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சுகாதாரத் துறைக்குப் முதலமைச்சர் மூன்று மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்:
மழைக் காலங்களில் எந்தவித தொற்றுநோய்களும் பரவாமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்.
உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் எக்காரணத்தைக் கொண்டும் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படக் கூடாது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தடையில்லா சிகிச்சை வசதிகள் 24 மணி நேரமும் உறுதி செய்யப்பட வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் 250 படகுகள் தயார் நிலை: 1.40 லட்சம் பேர் மீட்புப் பணியில் - அமைச்சர் செங்கோட்டையன்!
இதற்கேற்ப அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் தீவிர மின்தடை ஏற்பட்டாலும் மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர்கள் தொடர்ந்து இயங்க போதிய எரிபொருள் இருப்பு வைக்க மின்துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வென்டிலேட்டர், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் ஆக்சிஜன் விநியோகம் எந்த விநாடியும் தடைபடக் கூடாது என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கண்டிப்பான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்பு வந்த 5 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும் வகையில் சென்னையில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பருவமழை காலத்திற்கான காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மற்றும் பாம்புக்கடி எதிர்ப்பு மருந்துகள் 3 மாத காலத்திற்குத் தட்டுப்பாடின்றி முன்கூட்டியே கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று சென்னையில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெறும் 3 மணி நேரத்தில் 36 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து அரசுக்கு எந்தவித முறையான முன்னறிவிப்போ, சிவப்பு எச்சரிக்கையோ தரப்படவில்லை. இருப்பினும் நிலைமையைத் துரிதமாகக் கையாண்டுள்ளோம்.

முந்தைய ஆட்சியில் 90% முதல் 95% மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகக் கூறினார்கள். அவர்கள் பணிகளையே செய்யவில்லை என்று நான் கூறவில்லை; ஆனால் பணிகளை முழுமையாகச் செய்யவில்லை. வடிகால் கட்டமைப்பு சரியான திட்டமிடலுடன் அமைக்கப்படாததால்தான் மழைநீர் மருத்துவமனைகளுக்குள் புகும் சூழல் உருவானது. முந்தைய ஆட்சியில் செய்ததை விட இந்த 4 மாத காலத்தில் நாங்கள் துரிதமாகப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
தற்போது மழை வெள்ளத்தால் நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் கொதிக்க வைத்த குடிநீரையே பருக வேண்டும். ஒடிசா மாநிலம் பூரி நகரில் குழாய்களில் இருந்து நேரடியாகப் பிடித்துக் குடிக்கும் குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது போல, தமிழகத்திலும் குழாய் குடிநீரை நேரடியாகக் குடிக்கும் நிலையை உருவாக்குவதே அரசின் நீண்டகால லட்சியம்.
கர்ப்பிணிப் பெண்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பாகப் பிரசவம் மற்றும் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்களும், சென்னையில் 40 முகாம்களும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. தேனாம்பேட்டை கட்டுப்பாட்டு மையத்திற்கு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாகப்
இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை: உத்தரகாண்ட் உடன் தமிழ்நாடு இன்று மோதல் - சேப்பாக்கத்தில் இலவச அனுமதி!