கரூரில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான "கிங்டம்" திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது. நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்தால் திரையரங்க நிர்வாகம் முடிவு.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த 31ஆம் தேதி "கிங்டம்" திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, அதனை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க உரிமையாளர்களிடம் நாம் தமிழர் கட்சியினர் திரைப்படத்தை திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என்று மனு அளித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று கரூர் மாநகரில் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அமுதா திரையரங்கில் நிர்வாகிகளிடம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று மனு அளித்தனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பில் இந்தியாவின் டாப் 10 நகரங்கள்.. லிஸ்ட்ல சென்னை இருக்கா..??
இது தொடர்பாக விளக்கம் அளித்த திரையரங்க நிர்வாகிகள், பாதுகாப்பு கருதி ஏற்கனவே புக்கிங் செய்யப்பட்டுள்ள ரசிகர்களுக்காக இன்று ஒரு நாள் மட்டும் திரைப்படம் திரையிடப்படும் என்றும், நாளை முதல் காட்சிகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியினரின் இந்த போராட்டம் காரணமாக கரூர் நகர காவல் துறையினர் திரையரங்கத்திற்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே ஜாக்கிரதை..!! கேரளாவில் வெளுக்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!