கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து அப்பகுதி மக்கள் தவித்து வருவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக தெரிவித்தார். கடலரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்காமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் அலட்சியப் போக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினார்.
புத்தன்துறை பகுதியில் கடலரிப்பால் மக்களின் வாழ்விடங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே அப்பகுதி மக்கள் ஆட்சியாளர்களிடம், அதிகாரிகளிடமும் மனு அளித்து முறையிட்டு வருவதாகவும் குறைந்தப்பட்சம் பாதிப்புகளிலிருந்து உடைமைகளை பாதுகாக்க ஒரு தற்காலிக அலை தடுப்பு சுவராவது அமைத்து தரவேண்டி கிராம மக்களும் மீனவர் நல அமைப்புகளும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாகவும் சீமான் கூறினார். ஆனால் இவை எவற்றையும் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் இதையே காரணம் காட்டி மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களைவிட்டு வெளியேற்ற நினைப்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமை என குற்றம் சாட்டினார்.

திமுக அரசின் அலட்சியம் காரணமாக புத்தன்துறையில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கடல் அரிப்பால் தற்போது 13 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவச் சொந்தங்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மீனவ மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையே, இன்று புத்தன்துறை மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து வீதியில் இறங்கி போராட வேண்டிய துயரநிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அவர்களின் வாழ்விடங்களிலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு பகுதிகளில் இடம் தருவதாக கூறி மீனவ மக்களை கடற்கரையை விட்டு வெளியேற்றுவது வெட்கக்கேடானது என்று கூறிய சீமான், ஒருபோதும் ஏற்க முடியாத கொடுங்கோன்மை என்றார்.
இதையும் படிங்க: முதல்வர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்த சீமான்... பின்னணி குறித்து வெளியான 2 பரபரப்பு காரணங்கள்...!
கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புத்தன்துறை மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றும் முடிவை கைவிட்டு, வீடுகளையும் விலைமதிப்பில்லா உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்க உடனடியாக பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைத்துதர வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: எந்த பிரச்சனையும் இல்லை! சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்குங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் ஆணை..!