நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகவும், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டைத் தேடியபோது அது காணாமல் போனது தெரியவந்ததாகவும், நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி தனது பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இதனால், விண்ணப்ப நிராகரிப்பை ரத்து செய்து புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த மனுவை விசாரித்தபோது, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு பதிலளிக்க உத்தரவிட்டார்.
நிலுவையில் உள்ள வழக்குகள் பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்பது சீமானின் வாதமாக இருந்தது.சீமானுக்கு எதிராக தமிழகத்தில் பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை பெரும்பாலும் அவரது பொதுக் கூட்டங்களில் ஆற்றிய பேச்சுகள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது.

இந்த வழக்குகள் பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையாக கருதப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக வழக்கு பதியப்பட்டுள்ளதாக சீமான் தரப்பு விளக்கம் அளித்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு! ஸ்ரீ வஸ்தவாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்..!
சீமானுக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்டதற்கு முதன்மையான காரணம், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளாகும். குறிப்பாக அவை அவரது அரசியல் பேச்சுகள் மற்றும் செயல்பாடுகளுடன் தொடர்புடையவை. இந்த வழக்குகள், இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் அவருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு தடையாக அமைந்துள்ளன. மேலும், அரசியல் உள்நோக்கங்கள் மற்றும் அவரது சர்ச்சைக்குரிய பொது உருவமும் இந்த முடிவில் பங்கு வகித்திருக்கலாம். இருப்பினும் சீமானத்து பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: மன்னிச்சிடுங்க.. நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர்..! வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்..!