தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி பேசுவார். ஒவ்வொரு பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சீமான் களத்தில் நிற்பதை பார்த்திருப்போம். அதேபோல், திராவிடம் என்ற பாரம்பரியத்தின் மையத்தில், ஒரு வேறுபட்ட குரல் எழுந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது திராவிடத்துடனான முரண், வெறும் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. அது தமிழர் அடையாளத்தின் அடிப்படையை மீண்டும் வரையறுக்கும் ஒரு தீவிரமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சீமானின் இந்த நிலைப்பாடு, திராவிடத்தை போலி கோட்பாடு என்று குற்றம்சாட்டி, அதன் ஆழமான சமூக-அரசியல் பாதிப்புகளை அம்பலப்படுத்த முயல்கிறது. சீமானின் அரசியல் பயணம், திராவிட இயக்கத்தின் செல்வாக்கிலிருந்து தொடங்கியது. ஆனால், காலம் செல்லச் செல்ல, சீமானின் பார்வை மாறியது. திராவிடம் தமிழின் தனித்தன்மையை மறைக்கிறது என்று அவர் விமர்சித்து வருகிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி சீமான் பேசுவது வழக்கம்.

மலைகளுக்கான மாநாடு, நீருக்கான மாநாடு, காடுகளுக்கான மாநாடு என நடத்தி சூழலியல் சார்ந்த பிரச்சினைகளையும் சீமான் பேசுவது உண்டு. இயற்கைக்கும் குரல் கொடுக்கும் அரசியல் தங்களுடையது என கூறுகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு வருகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “எனக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க... ஆனா...” - தமிழக மக்களை எச்சரித்த சீமான்...!
போட்டியிடும் வேட்பாளர்களையும் அவ்வப்போது சீமான் அறிவித்து வருகிறார். இதனிடையே, சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் என சீமான் அறிவித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ன ஒரு புத்திசாலித்தனம்? - ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? - யாருமே எதிர்பார்க்காத பதில் கொடுத்த சீமான்...!