நீட் என்பது இந்தியாவில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும். இது தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு மருத்துவக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஒரே மாதிரியான தகுதி மற்றும் தரத்தை உறுதி செய்ய உதவுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையிலேயே சீட் கிடைக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் தகுதி தேர்வு எழுதிக் கொள்ளலாம் வயது அதற்கு தடை இல்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நேர் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அறுபது வயதை கடந்த இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட மூன்று மூத்த குடிமக்கள் தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்துள்ளனர். மேலும், பல் மருத்துவர்கள், செவிலியர்கள், ஹோமியோபதிகள், சித்த மருத்துவர்கள், போன்ற படிப்புகளுக்கு 35 வயதுக்கு மேற்பட்டோர் சுமார் 25 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் மாநில தேர்வு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மருத்துவம் அல்லது பல் மருத்துவ படிப்புகளை சேர அதிகமான பட்டதாரிகள் மற்றும் நிபுணர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அதிகம் என்றும் அதிகமான மூத்த குடிமக்கள் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைய வேட்பாளர்களோடு போட்டியிட போதுமான மதிப்பெண்கள் அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் சிலர் 69% இட ஒதுக்கீடூ பிரிவின் கீழ் ஒரு இடத்தை பெறக்கூடிய மதிப்பெண்ணெய் பெற்றுள்ளதாகவும் அவர்கள் அரசு கல்லூரியில் படிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING நீட் மறுதேர்வு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!
இதையும் படிங்க: நீட் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்கள்.. மார்தட்டி பெருமிதத்துடன் வாழ்த்து சொன்ன அண்ணாமலை..!