தமிழ்நாட்டில் பண்டிகை காலங்கள் என்பது மகிழ்ச்சியும், குடும்ப இணைப்பும் நிறைந்த காலமாக இருந்தாலும், பயணிகளுக்கு இது அவதியின் காலமாகவே மாறிவிட்டது. குறிப்பாக, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புது வருடம் போன்ற பெரிய பண்டிகைகளின் போது, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை கணிசமாக உயர்த்துவதால், சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பண்டிகை காலங்களில் பயணத் தேவை திடீரென அதிகரிப்பது இந்தப் பிரச்சினையின் முதல் காரணம். தமிழ்நாட்டின் பெரு நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள், பண்டிகைகளுக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட இரு மடங்கு அதிகரிக்கிறது.

இதனால், அரசு சாலை போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், அவை போதுமானதாக இருப்பதில்லை. கட்டண உயர்வின் அளவு குறித்து பார்க்கும்போது, இது ஆண்டுதோறும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தக் கூடுதல் செலவு அவர்களின் பண்டிகை மகிழ்ச்சியை அழிக்கிறது. பண்டிகைக்காக சேமித்த பணம் முழுவதும் பேருந்து டிக்கெட்டுக்கேப் போய்விட்டது என்று கூறும் அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளி..!! கலிபோர்னியாவில் அரசு விடுமுறையாக அறிவிப்பு: வரலாற்று மைல்கல்..!!
வரும் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மும்மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல ரூ.1,800 ஆக இருந்த கட்டணம் ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா? - தீபாவளிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்... எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அதிரடி முடிவு...!