மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 10 லட்சம் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் கிரிஜா (33). இவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக பணியில் வேலை பார்ப்பதாக கூறி பலரை நம்ப வைத்துள்ளார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர், ஹெட் க்ளார்க் ஓ.ஏ, உள்ளிட்ட வேலைகள் வாங்கித் தருவதாக கூறி 40 பேரிடம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை தனது கணவர் ரமேஷ் மற்றும் தனது தாயார் கல்பனா ஆகியோர் உதவியுடன் ஏமாற்றியுள்ளார்.
பணத்தைக் கொடுத்தவர்கள் வேலை வாங்கித் தராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர். இதனை அடுத்து கருவாழக்கரையைச் சேர்ந்த அனுசியா மனோஜ் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பணத்தை கொடுத்து ஏமாந்த பலர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... சென்னையில் காவல்துறை அதிரடி ஆக்ஷன்...!
இதனைத் தொடர்ந்து எஸ்.பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி தமிழ்வாணன் வழிகாட்டுதலின்படி காவல் ஆய்வாளர் விசித்ரா மேரி, காவல் உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார், தலைமை காவலர் ஆனந்த் மற்றும் காவலர்கள் மாலதி சியாமளா உள்ளிட்டோர் கிரிஜா, கிரிஜாவின் தாயார் கல்பனா, கிரிஜாவின் கணவர் ரமேஷ் ஆகிய மூன்று பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இது நமக்குத் தேவையா? - வாயை விட்டு வசமாக சிக்கிய கனிமொழி... வச்சி செய்த டெல்லி...!