வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

மே 16-ல் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி.. ஆட்சியர் அறிவிப்பு..!

127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

கோடை வெயில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கோடை விடுமுறையில் தான் நம் வீட்டு குழந்தைகளும் நம்முடன் இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக இருக்க நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான் உதகை.

மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளிர்ச்சியான சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம். அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

இதையும் படிங்க: மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்பட மாட்டாது.. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்..!

 நடப்பாண்டு கோடை விழாவை ஒட்டி ஆலோசனைக் கூட்டம் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் லட்சுமி பவ்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோட்டக்கலை துறை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் இணையவழி வாயிலாக பங்கேற்றார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.

முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.

குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்பவர்களே… ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी