உதகை அருகே கவர்சோலா வனபகுதிக்குள் உள்ள அங்கர்போர்டு பகுதியில் தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் தொங்கு பாலத்துடன் கூடிய பழங்கால பங்களா ஒன்று உள்ள நிலையில் அங்கு தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு திரைபடங்கள் எடுக்கபட்டு பிரபலமாகி வருகிறது.
இந்த பங்களா குறித்த காட்சிகள் சமூக வலைதலங்களில் வைராலாகி வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்களாவை காண வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு எஸ்டேட் நிர்வாகம் தலா 100 ரூபாய் விதம் வசூலிப்பது மற்றும் எஸ்டேட்டிற்குள் அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக நீலகிரி மாவட்ட வன அலுவலருக்கு புகார் வந்தது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் கவர்னர் சோலா வனத்துறையினர் எஸ்டேட் நிர்வாகத்திடம் விசாரணை நடத்திய போது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அந்த எஸ்டேட் நிர்வாகத்தின் மேலாளர் மற்றும் உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வசூலிக்கபட்டது.
இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே மோடி.. மனதார வாழ்த்திய இத்தாலி பிரதமர் மெலோனி..!!
அதனை தொடர்ந்து இன்று முதல் அந்த பங்களாவை காண வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாமல் வனத்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனிடையே விதிகளை மீறி நடைபெற்று வந்த சுற்றுலாவிற்கு உடனந்தையாக இருந்த சம்பந்தபட்ட வனத்துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உதகை சுற்றுவட்டாரா பகுதியில் தேயிலை எஸ்டேட் மற்றும் தனியார் தோட்டங்களில் விதிகளை மீறி சுற்றுலா நடத்த கூடாது என அறிவித்துள்ள நீலகிரி மாவட்ட வனத்துறையினர் மேற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏலேய்… அண்ணன் வரேன்! மாவட்டச் செயலாளர்களுடன் விஜய் தீவிர ஆலோசனை