தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள். வேட்பாளர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்துடன் சென்று வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர். தேனி மாவட்டம் பெரிய குளத்தில் முன்னாள் முதலமைச்சர் திமுக வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இதையும் படிங்க: “வீணா போனவரைப் பற்றி பேச சொல்லாதீங்க” - கூட்டத்தில் இருந்து வந்த குரலால் கடுகடுத்த டிடிவி தினகரன்...!
வாக்களித்த பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் வெற்றி வாய்ப்பை பெறும் எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜயின் அரசியல் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதற்கு மக்கள் தான் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பேருந்து சேவையில் தாமதம்..! சிங்காநல்லூரில் வாக்கு செலுத்திய பின் அண்ணாமலை பேட்டி..!