தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடன் வாக்களித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகளின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களின் சீரான ஒருங்கிணைப்பில் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை முதலே வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்கு செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மக்கள் வாக்கு செலுத்த வருவதை சில சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை!! தமிழகம் இருண்ட நிலைக்கு சென்றுவிட்டதாக அண்ணாமலை சாடல்!
இன்னும் வாக்களிக்க இருந்தாலும் கூட தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பேருந்து சேவைகள் தாமதம் இருப்பதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, யாரையும் குறை கூற வேண்டிய தேவை இல்லை என்றும் தேர்தல் ஆணையம் இதனை கவனத்தில் கொண்டு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க..! சௌமியா அன்புமணி ஆதரித்து அண்ணாமலை பரப்புரை..!!