கேவியட் மனு என்பது, ஒரு நபர் அல்லது அமைப்பு, தங்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கு அல்லது மனு தாக்கல் செய்யப்படும்போது, முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ஒரு முன்னெச்சரிக்கை மனு. திமுகவின் "ஒரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெறுவதற்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்த விவகாரத்தில், அதிமுக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக திமுக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், தங்களது தரப்பு கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. இத்திட்டம் மக்களை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி OTP பெறும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த ஓடிபி பெறும் செயல்முறை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓடிபி பெறும் முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி பெறுவது, தனிநபர் தரவுகளின் தனியுரிமையை மீறுவதாகவும், இது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களை கேட்கவில்லை.. குற்றச்சாட்டை நிராகரித்த திமுக..! நீதிமன்றத்தில் வாதம்..!
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஓடிபி வழக்கு தொடர்பாக அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளத.
இதையும் படிங்க: #2026ELECTION: பசுமை வீடு, பட்டுச்சேலை..! வாக்குறுதிகளை அள்ளி வீசிய இபிஎஸ்..!