கடலூர் மாவட்டத்தின் திட்டக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது எழுமேடு என்ற ஊர். இந்த சிறிய ஊரில் அமைந்துள்ள பச்சைவாழி அம்மன் கோவில், பக்தர்களின் நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், கிராம தெய்வ வழிபாட்டின் சிறந்த உதாரணமாகும்.
இந்த இடம், பச்சைபசேல் என்று அழைக்கப்படும் வயல் நிலங்களின் மையமாக இருந்தது. இக்கோவிலின் பிரதான தெய்வமான பச்சைவாழியம்மன், சக்தியின் அம்சமாக வழிபடப்படுகிறார். அம்மன், பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையாக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பச்சைப் புடவை சாத்தி வழிபடுவது, பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடனாகும்.

இந்த பச்சைவாழி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே கோவிலுக்குள் நுழைய முயன்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். அதிகாரிகளுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அறநிலையத்துறையில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமா? உண்மை நிலவரத்தை சொன்ன TN FACT CHECK...!
இதை எடுத்து 200க்கும் மேற்பட்டோரை போலீசார் தரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். கிராம மக்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடாது என்றும் தற்போது உள்ள நடைமுறையை தொடர வேண்டும் எனவும் கூறினர். இந்த சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் பச்சை வாழிய அம்மன் கோவிலுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வருகை தந்தார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையும் படிங்க: 'காளி' என்ன கைதியா..?? தலை துண்டிக்கப்பட்ட காளி சிலை போலீஸ் 'கைதி வேனில்' அகற்றம்..!! கொந்தளித்த மக்கள்..!!