• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடி கைது..!!

    பழனி நிலமோசடி விவகாரத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
    Author By Nila Thu, 06 Aug 2026 15:17:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani land issue justin arrest

    பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான விலைமதிப்பற்ற நிலத்தைச் சுற்றி வெடித்த மோசடி விவகாரம், தமிழகத்தின் பதிவுத்துறை மற்றும் கோயில் நிலப் பாதுகாப்பு தொடர்பான பல கேள்விகளை எழுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 1.40 ஏக்கர் நிலம், சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலம், ஜூலை 6 ஆம் தேதி போலி ஆவணங்கள் மூலம் வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

    அன்றைய தினம் வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் இருந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் இந்தப் பத்திரப்பதிவை முடித்து வைத்தார். நீதிமன்ற உத்தரவு மற்றும் கோயில் நிர்வாகத்தின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும் இந்தப் பதிவு நடைபெற்றது என்பது பின்னர் தெரியவந்தது.இந்தச் சம்பவம் வெளியானதும் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    Justin arrest

    பத்திரப்பதிவுத் துறை ஜஸ்டின் மணிகண்டனை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டதையொட்டி, நிலத்தை விற்றதாகக் கூறப்படும் முருகதாஸ், அதை வாங்கிய வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி, மேலும் இந்தப் பரிவர்த்தனைக்கு உதவியதாகச் சொல்லப்படும் வழக்கறிஞர் அன்வர்தீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிபிசிஐடி காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.ஜஸ்டின் மணிகண்டன் தனக்கு எதிரான கைது நடவடிக்கையைத் தவிர்க்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வை நாடினார். நீதிமன்றம் அவருக்கு ஆகஸ்ட் 4 வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கியது. அதோடு திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி விசாரணையில் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது.

    இதையும் படிங்க: டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    அதன்படி அவர் பல நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் விசாரணை முன்னேற்ற அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிமன்றம், (நேற்று) ஆகஸ்ட் 5 ஆம் தேதி அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இடைக்காலப் பாதுகாப்பும் ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றம், பதிவுச் செயல்முறையில் அவர் நல்லெண்ணத்துடன் செயல்படவில்லை என்றும், பிற குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டதாகவும் குறிப்பிட்டது. விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் முன்ஜாமீன் வழங்க இயலாது என்றும் தெரிவித்தது. இந்த உத்தரவுக்குப் பின்னர் சிபிசிஐடி போலீசார் இன்று ஜஸ்டின் மணிகண்டனைக் கைது செய்தனர். 

    இதையும் படிங்க: பழனி நில விவகாரத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    மேலும் படிங்க
    அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

    அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு
    நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

    நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    புதிய வடிவில் ரூபாய் நோட்டுகள்..!! 2027 ஏப்ரலில் தொடங்கும் பிளாஸ்டிக் நோட்டு காலம்..!!

    புதிய வடிவில் ரூபாய் நோட்டுகள்..!! 2027 ஏப்ரலில் தொடங்கும் பிளாஸ்டிக் நோட்டு காலம்..!!

    இந்தியா
    திருவள்ளூரை உலுக்கிய கோரச் சம்பவம்...! அம்மோனியா வாயுக்கசிவு வழக்கு... 3 பேருக்கு நிபந்தனை ஜாமின்..!!

    திருவள்ளூரை உலுக்கிய கோரச் சம்பவம்...! அம்மோனியா வாயுக்கசிவு வழக்கு... 3 பேருக்கு நிபந்தனை ஜாமின்..!!

    தமிழ்நாடு
    காலி பாத்திரம் சத்தம் போடுவது போல் உள்ளது! பட்ஜெட்டை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    காலி பாத்திரம் சத்தம் போடுவது போல் உள்ளது! பட்ஜெட்டை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு
    வேளாண் பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு... சி.எம். விஜய்க்கு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை...!

    வேளாண் பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு... சி.எம். விஜய்க்கு காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share