தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்தே அக்கட்சியினரின் அட்ராசிட்டி எல்லை தாண்டி சென்று கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் குற்றச்சாட்டி வருகின்றனர். தவெக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடுகிறேன் என சாலையில் இறங்கி ஆட்டம் போட்டது முதல் கட்சி நிர்வாகிகள் என்ற போர்வையில் தற்போது அரசு அலுவலகங்களுக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுப்பது வரை சோசியல் மீடியா ட்ரெண்டிற்காக பொதுமக்களை நொந்தரவு செய்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், பேரூராட்சி மற்றும் ஊராட்சி அலுவலங்களில் அட்ராசிட்டி செய்து வரும் நிலையில், தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிற்காக கோயில்களில் சிலர் வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது பக்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு செல்போன் மற்றும் வீடியோ உபகரணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்கள் மலையடிவாரத்தில் வைத்து செல்வதற்காக பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாவலர்களால் சோதனை செய்யப்பட்டு செல்போன்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருந்த போதும் பக்தர்கள் சிலர் செல்போன்களை மறைத்து மலை கோயிலுக்கு எடுத்துச் செல்வது தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!
இந்த நிலையில் பழனி மலை கோயில் படிக்கட்டல் சென்ற வெளியூரை சார்ந்த இளம் ஜோடி வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படிக்கட்டில் செல்லும்போது தனது மனைவியை தூக்கிச் சென்றவாறு இளைஞர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பாடலுடன் பரப்பியுள்ளார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கோயில் நிர்வாகம் வீடியோ வெளியிட்ட பக்தர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
ஏற்கனவே பழனி மலைக் கோயிலுக்கு சென்ற விஜய் ரசிகர் மலைக்கோயில் படிப்பாதையில் விஜயின் பாடலை ஒளிபரப்பி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் பழனி கோயிலில் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!