நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட பெரிய கருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கூறும் போது, நிச்சயமாக நீதிமன்றத்தை நாடுவோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பெரிய கருப்பன் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு முறையீடு செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்று, இருமுறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கே.ஆர். பெரியகருப்பன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த முடிவு திமுகவின் பாரம்பரிய கோட்டையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்ற நிலையில், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்பு 30 வாக்குகள் முன்னிலையில் இருந்த பெரியகருப்பன், இறுதியில் ஒரு வாக்கால் தோற்றுப் போனது, தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. திருப்பத்தூர் தொகுதி திமுகவுக்கு நீண்டகாலமாக வலுவான கோட்டையாக இருந்து வந்தது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!
2006 முதல் பெரியகருப்பன் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், இந்தத் தோல்வி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தச் சூழலில், மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு பெரியகருப்பன் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை கோரி உச்சநீதிமன்றத்தை பெரியகருப்பன் நாடியுள்ளார்.
இதையும் படிங்க: போராட்டம் பண்ணுவீங்களா.? மயிலாடுதுறையில் காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்..!