கோவையில் அமைச்சர் சம்பத்குமார் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை இளைஞர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் போலீஸாரும் சமாதானம் செய்ய முயல்வதாகவும், வெளி மாவட்டத்தில் வேலைக்கு வந்த இடத்தில் பாதுகாப்பு இல்லை என பாதிக்கப்பட்ட ஊழியர் குமுறி உள்ளார்.
குறிப்பாக அமைச்சர் சம்பத்குமார் இன் உறவினர் என்று கூறியது ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்று கூறி வரும் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துவிட்டது கோவை காந்திபுரம் அழகு பார்மசி அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் ஒரு நபர் கேனில் பெட்ரோல் கேட்டு வந்ததாக தெரிகிறது.

அப்போது, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கேனில் பெற்று கொடுப்பதில்லை என்று. காவல் நிலையத்தில் அனுமதி வாங்கி வரவும் என்று கூறியுள்ளார். அப்போது வாங்க வந்த நபர் நான் யார் தெரியுமா? அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. யாராக இருந்தாலும் கேனில் பெட்ரோல் இல்லை என்றும் அப்படி தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் அனுமதி வாங்கி வரவும் கூறியதால் அந்த இளைஞர் பெட்ரோல் பங்க் ஊழியர் பிரசாந்தை கடுமையாக தாக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்..! அரசு பேருந்து டிரைவர்கள் மீது சரமாரி தாக்குதல்... ஒருவர் கைது..!!
பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் கூறுகையில் போலீசார் தங்களை சமாதானப்படுத்த முயல்வதாகவும், ஊரு விட்டு ஊர் வந்து வேலை பார்க்கும் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் மனம் நொந்து கருத்து தெரிவித்தார்.
இதையும் படிங்க: DNT ஒற்றை சான்றிதழ் விவகாரம்: கொள்கை முடிவை முதலமைச்சரே எடுப்பார் - அமைச்சர் சம்பத்குமார்!