பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை மாநகரத்தில் பெண்கள், குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த பிங்க் நிற ஆட்டோக்களை இயக்க பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற பெண் ஓட்டுநர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் சிலர் சென்னையில் பல இடங்களில் ஓட்டி வருவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சமூக நலத்துறை கலாய்வு குழு கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. அப்போது இளஞ்சிவப்பு ஆட்டோக்களை சில ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டது.தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின் கீழ் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை பெண்கள் மட்டுமே இயக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி தமிழக ஆம்னி பஸ் கேரளா போகாது..!! உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு..!! என்ன நடந்தது..??
இந்த விதிகள் பற்றி இளஞ்சிவப்பு ஆட்டோ இயக்கும் பயனாளிகளுக்கு பலமுறை எடுத்துரைத்த பின்னரும் ஆண்கள் ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறினால் பிங்க ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால்ஆர்டிஓ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமூக நலத்துறையால் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இதனிடையே, சமூக நலைத்துறை ரீதியாக எச்சரிக்கை விடப்பட்ட பின்னரும் தொடர்ந்து ஆண்கள் சிலர் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை இயக்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் குவிந்து வந்துள்ளன.
இதனையடுத்து இனியும் பிங்க் நிற ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் தொடர்ந்து இயக்கி வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன பகல் கனவா? எந்தக் கொம்பன் நினைச்சாலும் திமுகவை அசைக்க முடியாது... முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்...!