தமிழக அரசியலில் பாஜகவின் எழுச்சி இப்போது எல்லோரும் பேசும் தலைப்பாக மாறிவிட்டது. திராவிட அரசியலின் கோட்டையாக விளங்கும் தமிழ்நாட்டில், பாஜக தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டு வருகிறது என்பது உறுதி. குறிப்பாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடம் கூட வெல்லவில்லை என்றாலும், பாஜக தனித்துப் போட்டியிட்டு 11 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றது. இது அவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்தது. அதற்கு முன்பு வரை, பாஜகவின் வாக்கு வங்கி 3-4 சதவீதத்துக்குள் இருந்தது.
இப்போது அது இரட்டை இலக்கத்தைத் தொட்டுவிட்டது. இந்த வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக தீவிரமாக முயற்சி செய்கிறது.பாஜகவின் இந்த முயற்சியில் முக்கியமான ஒரு அம்சம் அதிமுகவுடனான கூட்டணி. 2023-இல் கூட்டணி உடைந்தபோது, பலரும் பாஜக தனித்துப் போகும் என்று நினைத்தார்கள். ஆனால் 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இரு கட்சிகளும் மீண்டும் இணைந்தன. 2025 ஏப்ரலில் அமித் ஷா சென்னை வந்து, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கூட்டணியை அறிவித்தார்.
இதில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்றும் தெளிவாகச் சொல்லப்பட்டது. இந்தக் கூட்டணி பாஜகவுக்கு எப்படி உதவுகிறது என்றால், அதிமுகவின் வலுவான கட்டமைப்பு மற்றும் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி, பாஜக தனது செல்வாக்கை விரிவாக்க முடியும். அதிமுகவுக்கு பாஜகவின் தேசிய அளவிலான ஆதரவும், மத்திய அரசின் திட்டங்களும் உதவியாக இருக்கும்.சமீபத்தில், ஜனவரி 2026-இல் பாமகவும் இந்தக் கூட்டணியில் இணைந்தது ஒரு பெரிய boost. அன்புமணி ராமதாஸ் எடப்பாடியைச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினார். பாமக வன்னியர் சமூகத்தில் வலுவான செல்வாக்கு கொண்டது, வட தமிழகத்தில் பல தொகுதிகளில் தாக்கம் செலுத்தும். இது NDA கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி என் மீது வருத்தத்தில் இருக்கிறார்.. காரணம் இதுதான்..!! டிரம்ப் வேதனை..!!
இதனிடையே வரும் 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளை அறிமுகம் செய்து வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளை அறிமுகம் செய்து வைப்பார் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்னதாக கூட்டணிகளை இறுதி செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... கூட்டணி கட்சிகள் அறிமுகம்... ஜன.28ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை...!